தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுசுக்கு தாத்தாவாக இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி பல்வேறு ரசிகர்களால் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், பாரதிராஜாவிற்கு கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டதால், மதுரையிலேயே ஒரு நாள் தங்கி விட்டு சென்னை திரும்பினார். அதன் பின் தன்னுடைய நீலாங்கரை இல்லத்தில் பாரதிராஜா ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சென்னையில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்கு பிறகு சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…