Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புதிய பாமக தலைவருக்கு முதல்வர், எதிர்கட்சி தலைவர் வாழ்த்து..!

Bala May 28, 2022 & 17:10 [IST]
புதிய பாமக தலைவருக்கு முதல்வர், எதிர்கட்சி தலைவர் வாழ்த்து..!Representative Image.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது; பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்! என குறிப்பிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான,எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர், அன்பு சகோதரர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும், புதிய தலைவரை தேர்வு செய்திருக்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்