தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் தொற்ரு உறுதி செய்யப்பட்டதால் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் இன்று (14ம் தேதி) சென்னை காவேரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…