Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தைவானை நோக்கி நகர்த்தப்படும் ஏவுகணைகள்....தென்சீனக்கடலில் போர் பதற்றம்..!

Bala August 02, 2022 & 17:01 [IST]
தைவானை நோக்கி நகர்த்தப்படும் ஏவுகணைகள்....தென்சீனக்கடலில் போர் பதற்றம்..!Representative Image.

சீனா தனது கடற்கரைக்கு அருகே அதிநவீன ஏவுகணைகளை நிலை நிறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அமெரிக்க நாடாளுமன்ற அவை தலைவர் நான்ஸி பெலோசி இன்னும் சில மணி நேரங்களில் தைவானில் தரையிறங்குவார் என கூறப்படும் நிலையில், தைவானுக்கு மிக அருகில் உள்ள சீனாவின் புஜியான் மாகாணத்தில் (1,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்க கூடிய) DF-16 என்கிற லாஞ்சர்களை சீன ராணுவம் நிறுத்தி வரும் வீடியோ வெளியாகி  பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. பெலோசி தைவான் சென்றால் சீனா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கடுமையாக எச்சரித்த நிலையில், அதனை மீறி பெலோசி தைவான் செல்கிறார். 

இதனையடுத்து நான்சி பெலோசி தைவன் செல்லும் போது அமெரிக்க போர்க் கப்பல்கள் தைவான் கடற்பகுதிகளில் நிலைநிறுத்தப்படும் என அமெரிக்க கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்