Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தைவான் அருகே அமெரிக்க போர் கப்பல்கள்...தென்சீனக்கடலில் உச்சகட்ட பதற்றம்

Bala [IST]
 தைவான் அருகே அமெரிக்க போர் கப்பல்கள்...தென்சீனக்கடலில் உச்சகட்ட பதற்றம்Representative Image.


அமெரிக்கா செனட் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் செல்லும் போது தைவான் அருகே அமெரிக்க போர் கப்பல்கள் நிலைநிறுத்தப்படும் என அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின் செனட் சபை சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக செல்கிறார். ஆசிய பயணத்தில் போது அவர் தைவானுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தன. இந்த நிலையில், நான்சி தைவான் சென்றால் சீனா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கடுமையாக எச்சரித்தது. 

இதனையடுத்து நான்சி தைவான் சென்றால் சீனா ரஷ்யாவுக்கு உதவிகளை வழங்கலாம் என்றும் இதனால் உக்ரைன் போரில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ரணுவ தலைமை பெண்டகம் வெள்ளை மாளிகைக்கு தகவல் தெரிவித்தது. இந்நிலையில் நான்சி தைவான் செல்லும் போது தைவான் அருகே அமெரிக்காவின் 4 போர்க்கப்பல்கள் தைவான் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்படும் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. 

யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் என்ற கேரியர் தென் சீனக் கடலைக் கடந்து தற்போது பிலிப்பைன்ஸ் கடலில், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு கிழக்கே மற்றும் ஜப்பானுக்கு தெற்கே உள்ளது என்று அமெரிக்க கடற்படை அதிகாரி கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்