Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்...

Nandhinipriya Ganeshan September 21, 2022 & 00:00 [IST]
பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்...Representative Image.

சென்ற மாதம் 10 ஆம் தேதி ராஜூ ஸ்ரீவஸ்தாவுக்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜிம்மில் அன்றைய தினம் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டது. வென்டிலேட்டர் மூலம் 15 நாட்களுக்குப் பிறகு இவர் சுயநினைவுக்கு வந்தார். 

இருப்பினும், செப்டம்பர் 1 ஆம் தேதி, அவருக்கு 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு மீண்டும் வென்டிலேட்டர் சப்போர்ட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 21 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி தனது 58வது வயதில் காலமானார். 

பாலிவுட் காமெடி நடிகரான இவர் 1980 களின் பிற்பகுதியில் இருந்து பொழுதுபோக்கு  துறையில் பணியாற்றியிருக்கிறார். மேலும், 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற "தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்" என்ற ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானார். அவர் 'மைனே பியார் கியா', 'ஆம்தானி', 'அத்தன்னி கர்ச்சா ரூபாயா' மற்றும் 'மைன் பிரேம் கி தீவானி ஹூன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்