Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர் சூரியின் உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை..! மக்கள் அளித்த புகார்...

Gowthami Subramani September 21, 2022 & 10:10 [IST]
நடிகர் சூரியின் உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை..! மக்கள் அளித்த புகார்...Representative Image.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக விளங்கும் சூரியின் உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நகைச்சுவை நடிகரான சூரி, மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகங்கள் மதுரையில் உள்ள பல்வேறு இடங்களில் அதாவது தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்த உணவகங்களில் ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், இந்த உணவகத்துக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு ஆவணங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உணவுப் பொருள்களுக்கு ஆவணங்கள் இல்லாதது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

அதன் படி, அம்மன் உணவகத்தின் மீது எழுந்த இந்த புகார் தொடர்பாக நடிகர் சூரிக்கு 15 நாளில் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பதற்கு வணிகவரித்துறை உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்