Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராஜினாமா..

Bala May 18, 2022 & 15:47 [IST]
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராஜினாமா..Representative Image.

குஜராத் காங்கிரஸ் செயல்தலைவர் ஹர்திக் படேல் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பாஜக பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதே வேளையில் எப்படியாவது குஜராத்தை கைப்பற்ற வேண்டும் என்ர நோக்கில் காங்கிரஸ் தலைமை பல வியூகங்களை வகுத்து வருகிறது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தை கைப்பற்றினால், பாஜவினர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்ப்படுத்த முடியும் என காங்கிரஸ் நம்பி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாவே காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த செயல் தலைவர் ஹர்திக் படேல், கடந்த வாரம் டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் என்பதை நீக்கினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று அவர் கட்சியின் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.

குஜராத்தில் படேல் சமூகத்தினர் வாக்கு வாங்கி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில் படேல் சமூகத்தின் பிரபலமான தலைவர் ஹர்திக் படேல் ராஜினாமா செய்துள்ளது கட்சிக்கு பின்னடைவை ஏற்ப்படுத்தும் என கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்