Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னப்பா இது? வித்தியாசமான சமோசா...

Nandhinipriya Ganeshan [IST]
என்னப்பா இது? வித்தியாசமான சமோசா...Representative Image.

சமோசா நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ். அந்த அளவிற்கு சமோசாவின் சுவை அனைவரது மனதிலும் ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. பொதுவாக சமோசா என்றால் உருளைக்கிழங்கு, வெங்காயம், ஏன் சில சமயங்களில் சிக்கனில் கூட செய்வார்கள்.

ஆனால், டெல்லியை சேர்ந்த ஒரு உணவு விற்பனையாளர் ஸ்ட்ராபெரி மற்றும் புளூபெர்ரி பழங்களை வைத்து சமோசா செய்துள்ளார். தற்போது, இந்த பிங்க் மற்றும் நீல நிற சமோசவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் பிங்க் கலரில் இருக்கும் சமோசா ஸ்ட்ராபெரி ஃபிளேவர் சமோசாவாம். இதில் ஸ்ட்ராபெரி ஜாம் ஆல் செய்யப்பட்டது. அதேபோல், நீல நிறத்தில் இருக்கும் சமோசா புளூபெர்ரி ஃபிளேவர் சமோசாவாம். இதில் புளூபெர்ரி ஜாம் ஐ கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. சரி, இதையெல்லாம் கேட்டதும் இந்த உணவகத்தின் பெயரை தானே தேடிட்டு இருப்பீங்க. இந்த உணவகம் டெல்லியில் இருக்கிறது, பெயர் "சமோசா ஹப்". 

சமோசா செய்வதற்கான செய்முறையானது ஊருக்கு ஊர் மற்றும் குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடும், ஆனால் இந்த மாதிரியான சோதனை செய்முறை பலரை வெறுப்படையச் செய்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்