Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதெல்லாம் பண்ணாதீங்க...சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை

Bala August 24, 2022 & 10:13 [IST]
இதெல்லாம் பண்ணாதீங்க...சுற்றுலா பயணிகளுக்கு  காவல்துறை எச்சரிக்கைRepresentative Image.

சுற்றுலா செல்லும் போது பயண விபரங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு கேரள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கேரளா காவல்துறை முகநூல் பக்கத்தில்;  இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பயண விவரங்களை புகைப்படங்களுடன் டேக் செய்யும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தவித பதிவு பெரும் அச்சுறுத்தலை உங்களுக்கு ஏற்ப்படுத்தும் என்றும்,  பயணத்தின் போது பொது/இலவச வைஃபை பயன்படுத்த வேண்டாம், பயன்பாட்டில் இல்லாதபோது ப்ளூ டூத்தை ஆஃப் செய்ய வேண்டும், அந்நியர்கள் வழங்கும் சார்ஜர்கள் மற்றும் பவர் பேங்க்களைப் பயன்படுத்தக்கூடாது என  கேரள காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா பரவலையடுத்து, உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்துள்ளது. சில புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு 2.7 கோடிக்கும் அதிகமானோர் ஆன்லைன் மோசடிகளுக்கு பலியாகியுள்ளனதாக கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்