Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

1582ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாயமான அந்த 10 நாட்கள்.. பின்னாடி இருக்கும் மர்மம் | october 1582 calendar history in tamil

Nandhinipriya Ganeshan Updated:
1582ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாயமான அந்த 10 நாட்கள்.. பின்னாடி இருக்கும் மர்மம் | october 1582 calendar history in tamilRepresentative Image.

சமூக வலைதளங்களில் தினமும் பல விதமான சுவாரஸ்யங்களும் தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன. அப்படி, சமீபத்தில் ஒரு பயனர் பகிர்ந்த ஒரு பதிவு இணையவாசிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தல அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் கடற்கரை பகுதியில் இருந்த அத்திப்பட்டி என்ற கிராமமே மாயமானது போல, 1582 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தல் வழக்கமாக இருக்கும் 31 நாட்களில் 10 நாட்கள் மாயமாகி உள்ளது. 

அதாவது, 1582 ஆம் ஆண்டின் காலெண்டரை பயனர் ஷேர் செய்துள்ளார். அந்த காலண்டரில் மற்ற மாதங்களை விட பத்து நாட்கள் குறைவாக இருந்துள்ளது. அதாவது, அக்டோபர் 5 முதல் 14ந் வரையிலான 10 நாட்கள் இல்லாமல் இருந்தது. அதெப்படி, ஒரு மாதத்தில் 10 நாட்கள் காணாமல் போகும், என்ன காரணம், என நெட்டிசன்கள் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க, இதற்கான காரணத்தை, குறித்து அமெரிக்க வானியல் இயற்பியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான நீல் டி கிராஸ் டைசன் கூறியுள்ளார்.

அதாவது, 1582 ல் ஜூலியன் நாட்காட்டியில் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு லீப் டேயுடன், பூமியின் சுற்றுப்பாதையுடன் ஒப்பிடும்போது பத்து கூடுதல் நாட்களைக் குவித்ததாகவும், இதனால் போப் கிரிகோரி தனது புதிய மற்றும் நேர்த்தியான துல்லியமான காலெண்டரை அந்த ஆண்டில் 10 நாட்களை ரத்து செய்து தொடங்கினாராம். இது தான் இந்த காலெண்டாரில் 10 நாட்கள் காணாமல் போனதற்கான காரணம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்