Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் மரணம்... சோகத்தில் திரையுலகினர்..!

Gowthami Subramani October 07, 2022 & 11:16 [IST]
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் மரணம்... சோகத்தில் திரையுலகினர்..!Representative Image.

பழம்பெரும் நடிகரான அருண் பாலி, மும்பையில் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் அறிமுகமாகி ஹிந்தியில் 3 இடியட்ஸ், கேதார்நாத், ஹே ராம், பானிபட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். அது மட்டுமல்லாமல், தனது நடிப்பிற்காக, பல விருதுகளைப் பெற்றுள்ளார். சின்னத்திரையிலும் இடம் பெற்று தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் என்றும் கூறப்படுகிறது. இவர் கடைசியாக, லால் சிங் சித்தா என்ற மூவியில், அமீர்கான்-கரீனா கபூர் உடன் இணைந்து நடித்திருந்தார். இவருடைய வயது 79. இவர் சமீபகாலமாக Myasthenia Gravis என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பாலிவுட் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர். மேலும், திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்