கடந்த சில நாட்களாக நடிகை திரிஷா அரசியலில் நுழையப்போவதாக வெளியான தகவலி வதந்தி என திரிஷாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னனி நாயகியாக நடிகை திரிஷா வலம் வருகிறார். நடிகர், அஜித், விஜய், உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும், மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வரவிருக்கும் பொன்னியன் செல்வன் படத்தில் குந்தவையாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை திரிஷா அரசியலில் நுழையப்போவதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. அவரின் நண்பரான தளபதி விஜய் அவரை அரசியலில் நுழைவதற்கு ஊக்குவித்ததாகவும் கிளப்பிவிடப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், தனது மகள் அரசியலுக்கு வருவார் என்ற வதந்தியை மறுத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…