Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடன் தொல்லை.. தந்தை மகள் விபரீத முடிவு.. உயிருக்கு போராடும் தாய்!!

Sekar September 04, 2022 & 13:15 [IST]
கடன் தொல்லை.. தந்தை மகள் விபரீத முடிவு.. உயிருக்கு போராடும் தாய்!!Representative Image.

குற்றாலாத்தில் ஒரு விடுதியில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தந்தையும் மகளும், உயிரிழந்துவிட்ட நிலையில், தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருநகர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (55) என்பவர் தனது மனைவி காமாட்சி மற்றும் மகள் தனபிரியாவுடன் குற்றாலம் முக்கிய அருவி நுழைவாயிலுக்கு எதிரே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த 31ஆம் தேதி இரவு அறை எடுத்து தங்கினார். 

இதையும் படிங்க : IPL 2023 : மீண்டும் தோனி தலைமையில் தான்.. உறுதி செய்த சிஎஸ்கே சிஇஓ!!

இந்நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கியிருந்த அறை கதவுகள் நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகாலிங்கம் மற்றும் அவரது தனபிரியா படுக்கையில் இறந்து கிடந்தனர். 

மனைவி காமாட்சி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடினார். உடனடியாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் காமாட்சியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தினரின் தற்கொலைக்கு கடன் தொல்லையே காரணம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் மகாலிங்கத்தின் மகனும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடன் தொல்லையால் தந்தை மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்