Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் தேர்வால் பாதிப்பு.. நடிகர் சத்யராஜ் பொளேர்!!

Sekar September 11, 2022 & 18:52 [IST]
நீட் தேர்வால் பாதிப்பு.. நடிகர் சத்யராஜ் பொளேர்!!Representative Image.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி தமிழகத்தில் மேலும் ஒரு தற்கொலை நடந்த நிலையில், நீட் தேர்வு முதல் தலைமுறை பட்டதாரிகளை பாதிக்கிறது என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சமீபகாலாமாக மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதிலும் பள்ளி மாணவர்கள் தற்கொலை என்பது கடந்த சில மாதங்களாகவே அதிகளவில் நடப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. இதனால் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு மட்டத்திலும் பேச்சுகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் ஈரோட்டில் மனதின் மையம் அறக்கட்டளையின் சார்பாக நேசம் சேவை மையம் தொடக்க விழா நடந்தது. அதில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், "உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாம் மருத்துவர்களிடம் செல்கிறோம். ஆனால் மனநலம் சார்ந்த பிரச்னை ஏற்பட்டால் மட்டும் எந்த மருத்துவர்களிடம் செல்வதில்லை. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், நான் எம்ஜிஆரின் பாடல் கேட்பேன். அதன் மூலம் நிறைய தெளிவு கிடைக்கும்." என்று தெரிவித்தார். 

தொடர்ந்து நீட் தேர்வு குறித்து பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தனது எண்ணம் என்று தெரிவித்தார். மேலும்  பேசிய அவர், "முதல் தலைமுறை பட்டதாரிகளை நீட்தேர்வு பாதிக்கும் என்பதால் அது தேவையில்லை. டாக்டர்கள் மற்றும் வக்கீல்கள் தங்கள் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிப்பறிவில்லாத பெற்றோரின் குழந்தைகள் படித்து குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியம்." என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், "நடிகர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் என பலர் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், நடிகர்களுக்கு நடிப்பை தவிர வேறேதும் தெரியாது. நடிகர்கள் ஒன்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களோ, அறிஞர்களோ அல்ல. எங்களுக்கு சாப்பாடு போடுங்கள், ஆனால் தூக்கிவைத்து கொண்டாடா வேண்டாம். அது தேவையில்லை." என்று தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்