Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜல்ஜீவன் திட்டம்.. தமிழகம் தான் டாப்.. விருது வழங்கி கௌரவித்த மத்திய அரசு!!

Sekar October 03, 2022 & 12:23 [IST]
ஜல்ஜீவன் திட்டம்.. தமிழகம் தான் டாப்.. விருது வழங்கி கௌரவித்த மத்திய அரசு!!Representative Image.

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, ஊராக சுகாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதற்காகவும், தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.

நாடு முழுதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 

இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மட்டும் 1.24 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 69.14 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. இதன் மூலம் ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய முதல் மாநிலமாக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

டில்லியில் நேற்று நடந்த துாய்மை பாரத விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இதற்கான விருதை வழங்க, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விருதை பெற்றுக் கொண்டார். 

மேலும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பிலும் 2021-22 ஆம் ஆண்டு தேசிய அளவில்,தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 

இதற்கான விருதை ஜனாதிபதியிடம் இருந்து, தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பெற்றுக் கொண்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்