Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காரைக்குடி இளவரசியான பிரான்ஸ் நாட்டு கிளி.. இந்து முறைப்படி நடந்த திருமணம்!!

Sekar September 06, 2022 & 12:43 [IST]
காரைக்குடி இளவரசியான பிரான்ஸ் நாட்டு கிளி.. இந்து முறைப்படி நடந்த திருமணம்!!Representative Image.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காரைக்குடி வாலிபரை இந்துமுறைப்படி திருமணம் செய்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதுாரைச் சேர்ந்தவர்கள் தங்கராசு - மாணிக்கவள்ளி தம்பதி. தங்கராசு மனைவியுடன் பிரான்சில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மகன் கலைராஜன் (32) அமராவதிப் புதுாரில் பிறந்தாலும், 8 வயதில் தாய், தந்தையோடு பிரான்ஸ் சென்றார். 

அங்கு தன்னுடன் பயின்ற மாணவி கெய்ல் (30) என்பவரை காதலித்து வந்துள்ளார். இரு குடும்பமும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, மணமகன் பிறந்த ஊரில் திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

மணமகளின் பெயரான கெய்ல் என்பதை கயல் என மாற்றி திருமண பத்திரிகை அடிக்கப்பட்டு உறவினர்கள் அழைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அமராவதி புதுாரில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கலைராஜன் - கயல் திருமணம் பாரம்பரிய இந்து முறைப்படி நடந்தது. 

உள்ளூரைச் சேர்ந்த மணமகன் உறவினர்களும், பிரான்சிலிருந்து வந்திருந்த மணமகளின் உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்