Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குவாட்டர் ரூ.20, பீர் ரூ 10 விலை உயர்வு...அதிர்சியில் மதுப்பிரியர்கள்..!

Bala May 20, 2022 & 12:41 [IST]
குவாட்டர் ரூ.20, பீர் ரூ 10 விலை உயர்வு...அதிர்சியில் மதுப்பிரியர்கள்..!Representative Image.

கடந்த சில மாதங்களுக்கு முன் சில மாநிலங்களில் மதுபான விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது தெலங்கான அரசும் மதுபான விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல மாநிலங்களில் மதுபான விலையை உயர்த்தி அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் 7/3/2022 அன்றைய தினம்  டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40,  புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை  உயர்த்த பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தெலங்கான அரசும் மதுபான விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, குவாட்டர் பட்டிலின் விலை ரூ.20 வரையும், பீர் பாட்டிலின் விலை 10 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருடத்திற்கு 6000 கோடி முதல் 7,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. தெலங்கானவில் தேர்தல் வரவுள்ள நிலையில் அரசு இந்த விலை உயர்வை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்