Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அய்யோ.. விட்றாதீங்க விட்றாதீங்க.. கதறிய ஜிபி முத்து!! என்னாச்சு?

Sekar September 19, 2022 & 14:50 [IST]
அய்யோ.. விட்றாதீங்க விட்றாதீங்க.. கதறிய ஜிபி முத்து!! என்னாச்சு?Representative Image.

டிக்டாக்கில் ஆரம்பித்து, தற்போது யூடியூப், சின்னத்திரை, வெள்ளித்திரை என பிரபலமாக இருக்கும் ஜிபி முத்துவை மற்றொரு யூடியூபர் டிடிஎப்.வாசன் என்பவர் கதறவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக சினிமா மூலம் பிரபலமாவதை விட யூடியூப் போன்ற சமுக ஊடகங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டே பலரும் பிரபலமாகி விடுகிறார்கள். அதில் ஜிபி முத்துவும் ஒருவர். இவருடைய வெள்ளந்தியான பேச்சை ரசிப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதே போல், யூடியூபில் பைக்கில் செல்லும் வீடியோக்களை வெளியிட்டு, அதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் டிடிஎப் வாசன். சில மாதங்களுக்கு முன்பு, இவரது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் கூடிய கூட்டமே இவருக்கு எந்த அளவு ஆதரவு உள்ளது என்பதை காட்டும்.

இந்நிலையில், டிடிஎப் வாசன் ஜிபி முத்துவை தன்னுடன் பைகில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது டிடிஎப் 160கிமீ வேகத்தில் செல்ல, பின்னே அமர்ந்திருந்த ஜிபிமுத்து கத்தி கதறியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் வேகமாக போக வேண்டாம் என்றும் 80 கிமீ வேகத்துக்குள் செல்லும்படியும் ஜிபிமுத்து கூறியும், டிடிஎப் வாசன் கேட்காமல் வேகமாக சென்றுள்ளார். மேலும் வண்டி ஓட்டும்போது இரு கைகளையும் விட்டுவிட்டு ஓட்டியது ஜிபி.முத்தவை பதற வைத்துள்ளது. 

இந்த வீடியோவை டிடிஎப் வாசன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், பல்வேறு சமூக ஊடகங்களிலும் இது வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்