சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெரும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இது 75வது சுதந்திரம் தினம் என்பதால் அமுதப் பெருவிழா என்ற பெயரில் எல்லா துறைகள் சார்ந்தும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுதந்திர தின விழாவில் பெருங் கூட்டங்களை தவிர்க்குமாறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும் தூய்மை இந்தியா திட்டத்தினை மாவட்டந்தோறும் பிரதமான இடங்களில் மையப்படுத்தி பிரபலப்படுத்துமாறும் உள் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…