Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்ன! நயன்தாராவின் பெயர் உடுகண்ணியா..? இதுக்கு இல்லயா சார் ஒரு End-u..?

Bala June 21, 2022 & 16:16 [IST]
என்ன! நயன்தாராவின் பெயர் உடுகண்ணியா..? இதுக்கு இல்லயா சார் ஒரு End-u..?Representative Image.

நடிகை நயன்தாராவின் பெயர் தமிழ்ப் பெயர் இல்லை அவரது பெயருக்கு ஒரு தமிழ்ப் பெயர் மாற்றாகப் பார்க்க வேண்டும் என்றால் ‘உடுக்கண்ணி’ என்று அழைக்கலாம் என்று கவிஞர் மகுடேஸ்வர் பதிவிட்டுள்ளார். 

இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளதாவது, நயன்தாரா’ என்னும் பெயர் தமிழ்ச்சொற்களால் ஆனதில்லை என்பதால் உரிய தமிழ்ப்பெயர் கூறுக’ என்னும் நண்பரின் பதிவொன்றைப் பார்த்தேன். நயனம் என்றால் கண். தாரா (தாரகை) என்றால் நட்சத்திரம். சில நாள்களுக்கு முன்வரை நட்சத்திரம் என்பதற்கு உரிய தமிழ்ப்பெயர் இல்லையோ என்று வருந்தியிருந்தேன். விண்மீன் என்பதும்கூட கவிதைப்பண்புள்ள உருவகப்பெயர்தான். உடுமலை என்ற ஊர்ப்பெயரை ஆராய்ந்தபோது உடு’ என்பது நட்சத்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பது தெரிந்தது. நயன்தாரா என்னும் பெயரைத் தமிழ்ப்படுத்தினால் ‘உடுக்கண்ணி’ என்று ஆகும் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பேஸ்புக் வாசி ஒருவர், இப்படியே எல்லாத்தையும் தமிழ்ப்படுத்திக்கொண்டிருந்தால் எப்படி..? இதுக்கு இல்லயா சார் ஒரு End-u?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்