Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிகரிக்கும் காய்ச்சல்.. தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை?

Sekar September 18, 2022 & 12:09 [IST]
அதிகரிக்கும் காய்ச்சல்.. தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை?Representative Image.

தமிழகத்தில் குழந்தைகளிடம்  H1N1 இன்ஃபுளுயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், புதுச்சேரியைப் போல் தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

புதுச்சேரியில் காய்ச்சல் காரமனாக மருத்துவமனைகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அங்கு செப்டம்பர் 25 ஆம் தேதி வரை ஒருவாரம் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் அதே போல் விடுமுறை அளிக்கப்படுமா எனும் கேள்விக்கு நேற்று பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "குழந்தைகளுக்கான காய்ச்சல் கொரோனாவுக்கு முன்பு இருந்த அளவில் தான் தற்போதும் உள்ளது.  

H1N1 இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 2 நாட்களுக்கு முன்பு 282 ஆக இருந்த நிலையில், இன்று கூடுதலாக 41பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் இதுவரை இன்ஃபுளுயன்சா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். 

காய்ச்சல் காரணமாக தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 4,740 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே கடந்த ஆண்டில் 5,000க்கும்  மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனவே இது இயல்பான ஒன்று தான் என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு பாதிப்பு இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டிய சூழல் தற்போது எழவில்லை." என்று தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்