Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலக அளவில் 2 வது இடம் பிடித்த விஜய் சேதுபதி...! கமலுக்கு எந்த இடம் தெரியுமா..?

Bala [IST]
உலக அளவில் 2 வது இடம் பிடித்த விஜய் சேதுபதி...! கமலுக்கு எந்த  இடம் தெரியுமா..?Representative Image.

 2022 ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த படங்களில் தமிழில் வெளிவந்த "கடைசி விவசாயி " திரைப்படம் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 

காக்கமுட்டை, குற்றமே குற்றம் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களை இயக்கிய மணிகண்டன், இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் விஜய்சேதுபதி, யோகிபாபு, நடிப்பில் கடைசி விவசாயி திரைப்படம் வெளியானது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை உனர்த்தும் வகையில் வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில்,  உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும்  இணையதளமான letterboxd தளம் வெளியிட்ட பட்டியலின்படி, 2022 ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த படங்களில் தமிழில் வெளிவந்த "கடைசி விவசாயி " திரைப்படம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 6-வது இடத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 11-வது இடத்திலும் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்