Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு - உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Bala August 24, 2022 & 12:32 [IST]
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு - உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கைRepresentative Image.

கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக  பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு தொடர்பான  விசாரணை இன்று வந்த நிலையில்,  பள்ளி தாளாளர்  தங்கள் மீது என்ன வழக்கு என்றே எங்களுக்கு தெரியவில்லை என்றும், எதற்காக கைது செய்யப்பட்டோம் என்றே தெரியவில்லை என வாதிட்டுள்ளார். 

இதனையடுத்து கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் கைது எதற்காக.? என நாளை மறுதினம் காரணத்தை தெரிவிக்காவிட்டால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என  சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்