Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவி ஸ்ரீமதி வழக்கு.. நீதிமன்றம் புது உத்தரவு!!

Sekar August 13, 2022 & 10:50 [IST]
மாணவி ஸ்ரீமதி வழக்கு.. நீதிமன்றம் புது உத்தரவு!!Representative Image.

ஸ்ரீமதி வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, மாடியிலிருந்து குறித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. 

ஆனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி போராட்டம் செய்த நிலையில், அந்த போராட்டம் பொன்னர் கலவரமாக மாறிய நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதன் மீதான விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் 5 பேருக்கு மேலும் 15 நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்