Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரதமரே, இது திரைப்படம் அல்ல...ராகுல் காந்தி டுவிட்..!

Bala June 01, 2022 & 16:18 [IST]
பிரதமரே, இது திரைப்படம் அல்ல...ராகுல் காந்தி டுவிட்..!Representative Image.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில்  பெண் ஆசிரியை பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து காஷ்மீர் பண்டிட்டுகள் 18 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் பாஜக மோடி தலைமையிலான  8 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடுவதில் மும்முரமாக இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  விமர்சித்துள்ளார்.

மேலும், காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர், 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று ஒரு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரதமரே, இது திரைப்படம் அல்ல, இன்றைய காஷ்மீரின் யதார்த்தம்" என்று ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.

ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த, குல்காமில் உள்ள கோபால்போராவில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ரஜினி பாலா என்ற பெண் ஆசிரியரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். மேலும் இந்த மாதத்தில் காஷ்மீரில் நடைபெற்ற ஏழாவது கொலை இது என கூறப்படுகிறது. 

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா; காஷ்மீரில் வசித்த ஒரு பெண் ஆசிரியை கொல்லப்பட்டுள்ளது, மாநிலத்தில் எந்தளவுக்கு அமைதி நிலவுகிறது என்பதை இது காட்டுகிறது. நாம் எந்தளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது" என்று வருத்தம் தெரிவித்தார். 

PDP தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில், காஷ்மீரில் இயல்பு நிலை இருப்பதாக மத்திய அரசு கூறினாலும்,  கொலைகள் அதிகரித்து வருவதாக கூறினார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்