கரூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். இந்த மாரியம்மன் சக்திவாய்ந்த அம்மன் என்றும் கேட்ட வரம் தரும் மாரியம்மன் என்றும் பக்தர்களால் நம்பிக்கையுடன் வழிபட்டு வரப்படுகிறது.
கரூர் மாரியம்மன் கோவிலின் வைகாசி உற்சவ விழா கடந்த 8ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. அம்மன் தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் தோன்றி அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில், நாளை மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு கரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…