12ம் வகுப்பு மாணவி வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தர்மபுரியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து வந்த அக்கம் பக்கத்தினர், மாணவியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனிமதித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்று மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழக்கும் முன் மாணவி வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் முனிரத்தினம் என்பவரை காதலித்ததாகவும், அவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து மன உளைச்சல் காரணமாக தற்கொலை முயற்சி செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…