Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

#BREAKING | சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு

Bala June 01, 2022 & 09:37 [IST]
#BREAKING | சிலிண்டர் விலை அதிரடி குறைப்புRepresentative Image.

வர்த்தக சிலிண்டர் விலை ரூபாய் 135 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.   

கடந்த மே மாதத்தில் சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டது. 14 கிலோ வீட்டு சிலிண்டரின் விலை ரூ.3.50 ஆகவும், 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.8 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எணெய் விலை உச்சத்தை அடைந்துள்ளதால், இன்று எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்து வந்தனர். 

இந்நிலையில் இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.135 குறைத்து எண்ணெய் நிறுவங்கள் அறிவித்துள்ளன. அதன்படி,  19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை டெல்லியில் 2,354 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 2,219 ரூபாயாகவும்,  கொல்கத்தாவில் 2,306 ரூபாய்க்கு பதிலாக 2,171.50 ரூபாயாகவும் இருக்கும். மும்பை மற்றும் சென்னையில் ரூ.2,507க்கு பதிலாக ரூ.2,373 ஆக உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்