Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேனி மக்களின் 12 வருட கனவு..தொடங்கியது ரயில் சேவை..

Bala May 27, 2022 & 11:15 [IST]
தேனி மக்களின்  12 வருட கனவு..தொடங்கியது ரயில் சேவை..Representative Image.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை - தேனி இடையேயான  ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், இன்று அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.  

மதுரை மற்றும் தேனி மாவட்டங்களை இணைக்கும் 75 கிமீ அகல ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி  நேற்றைய தினம்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களின் முக்கிய மறுசீரமைப்பு பணிகளுக்கு சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

ரயில் எண். 06701 மதுரை-தேனி சிறப்பு ரயில் மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கும், வடபழஞ்சியில் இருந்து 8.45 மணிக்கும், உசிலம்பட்டியில் இருந்து 9.05 மணிக்கும், ஆண்டிபட்டியில் இருந்து 9.20 மணிக்கும் புறப்பட்டு 9.35 மணிக்கு தேனியை சென்றடையும். 06702 தேனி-மதுரை சிறப்பு ரயில் தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும். மாலை 6.29 மணிக்கு ஆண்டிபட்டி. மாலை 6.47 மணிக்கு உசிலம்பட்டி, 7.05 மணிக்கு வடபழஞ்சி. மற்றும் மதுரை சந்திப்பை இரவு 7.35 மணிக்கு சென்றடையும். ரயில் இடைநிலை நிலையங்களில் ஒரு நிமிடம் நிற்கும்.

பேருந்து பயணத்தை ஒப்பிடும் போது ரயில் பயணம் பயண நேரத்தை பாதியாக குறைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்