Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடங்கள்

Bala July 05, 2022 & 18:07 [IST]
2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு  புதிய கட்டிடங்கள் Representative Image.

தமிழ்நாட்டில் உள்ள 2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு 1300 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு புதிய பள்ளிக் கட்டிடங்களைத் திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரில் அங்கன்வாடி கட்டிடத்தையும் திறந்து வைத்தபோது செய்தியாளர்களைச் சந்தித்தார்.  பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்; தமிழகத்தில் 2500 மரத்தடி பள்ளிக் கூடங்கள் செயல்பட்டு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை நிரந்தர கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏதுவாக நபார்டு வங்கி மூலம் 1300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற, மாவட்ட உறுப்பினர்களின் நிதி, ஆட்சியர்களின் நிதிகளைக் கொண்டு கட்டிடங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்