Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை… விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்ப தயாராகும் நாசா….!

Gowthami Subramani September 02, 2022 & 11:00 [IST]
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை… விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்ப தயாராகும் நாசா….!Representative Image.

மனிதர்களை நிலவிற்கு அனுப்புவதற்கான சோதனை மேற்கொள்ள ஆர்டெமிஸ் 1 என்ற ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. நிலவில் மனிதர்களை அனுப்பவதற்கான முயற்சியில் நாசா இறங்கியுள்ளது.

அதன் படி, ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி நடைமுறைப் படுத்த உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, ஆராய்ச்சியைத் தொடங்க உள்ளது.  இதற்காக, ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்ப உள்ளது.

மேலும், இந்த ராக்கெட் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் தூரத்தில் 42 நாட்களில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அப்பால் ஓரியன் விண்கலத்தைப் பறக்க விடுவதாகவும் நாசா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலாவுக்கு செல்லும் இந்த விண்கலம், கடந்த 29 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு கென்னடி விண்வெளி ஆய்வுக்கலத்தில் இருந்து புறப்படுபவதற்கான Count Down தொடங்கப்பட்டது. ஆனால், சில எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 40 ஆவது நிமிடத்தில் இதன் கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.  இந்த நிலையில் மீண்டும் இதனை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்