Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் தேர்வு முடிவு வெளியீடு…! தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாநிலம் எது தெரியுமா..?

Gowthami Subramani September 08, 2022 & 11:15 [IST]
நீட் தேர்வு முடிவு வெளியீடு…! தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாநிலம் எது தெரியுமா..?Representative Image.

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் நாள் நாடு முழுவதும் நடைபெற்றது. அதன் படி, இந்தியாவில் 497 நகரங்கள், வெளிநாடுகளில் 14 நகரங்கள் என மொத்தம் 3,570 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

அதன் படி, 17,78,725 பேர் எழுதிய இந்தத் தேர்வில், 56.28% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெற்றது. தமிழ் வழியைப் பொறுத்த வரை 31,965 பேர் நீட் தேர்வு எழுதினர். நேற்று இரவு இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்த தேர்வில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தனிஷ்கா என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். இவர், ராஜஸ்தான் கோட்டாவில் உள்ள பயிற்சிப் பள்ளியில் பயின்றார். தேசிய அளவில் முதலிடம் பிடித்த தனிஷ்காவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.

NEET Exam, NEET entrance Exam, NEET coaching centres, NEET Exam private coaching centres, NEET fees, NEET coaching fees, NEET UG Results 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்