Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'எவ்வளவு பாசமாக வளர்த்து இருந்தாலும் மிருகம் மிருகம் தான்'... உரிமையாளரை தாக்கிய மலைப்பாம்பு - வைரல் வீடியோ.. 

Nandhinipriya Ganeshan October 27, 2022 & 11:17 [IST]
'எவ்வளவு பாசமாக வளர்த்து இருந்தாலும் மிருகம் மிருகம் தான்'... உரிமையாளரை தாக்கிய மலைப்பாம்பு - வைரல் வீடியோ.. Representative Image.

இந்த உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் பாம்பை கண்டாலே பத்தடி தூரம் பயந்து ஓடுவார்கள். ஏன், "பாம்பை கண்டால் படையும் நடுங்கும்" என்ற பழமொழியும் கூட இருக்கிறது. ஆனால், இன்னும் சிலர் பாம்புகளை செல்லப் பிராணிகளாக வளர்த்துவருகிறார்கள். இருப்பினும், உங்களுக்கு பாம்பை கண்டாலே பயம் என்றால் இந்த வீடியோவை கொஞ்சம் எச்சரிக்கையுடன் பாருங்கள். ஏனென்றால், அப்படி ஒரு வீடியோ காட்சியை தான் பார்க்க போகிறோம். 

அதாவது, வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் தனது செல்லப்பிராணியான பாம்பை கூண்டில் இருந்து வெளியே எடுக்கும்போது அந்த பாம்பு அப்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளது. தற்போது இந்த கிளிப் இணையத்தில் வைரலாக பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோவை டெய்லி லவுட் என்ற பக்கம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. 1 நிமிடத்துக்கும் மேலாக ஓடும் இந்த வீடியோவில், ஒரு பெண் தன் செல்லப் பாம்பை அதன் கூண்டிலிருந்து வெளியே எடுக்க, மூடியை திறந்தவுடன், மலைப்பாம்பு அவளை நோக்கி பாய்ந்து கையைக் கடித்துவிட்டது. பின்னர், அந்த பெண்ணின் கையை இறுக்கமாக சுற்றுக்கொண்டது. பாம்பு பிடி எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை. அப்போது மற்றொரு நபர் அவருக்கு உதவிசெய்ய சென்றுள்ளார். ஆனால், பாம்பு நன்றாக பிடித்துக்கொண்டதால் அவற்றை இழுக்க முடியாமல் போனது. 

பின்னர், எவ்வளவு போராடியும் ஆக்சிஜன் கம்மியாக இருந்ததால் பெண்ணின் கை ஊதா நிறமாக மாற தொடங்கியது, சிறிது நேரத்தில் இரத்தமும் வர ஆரம்பித்துவிட்டது. இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதிலிருந்து எவ்வளவு பாசமாக வளர்த்து இருந்தாலும் மிருகம் மிருகம் தான் என்பதை உணர்ந்து கொண்டு இனி அனைவரும் எச்சரிக்கையோடு இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்