Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..! ஸ்டாலினுடன் சந்திப்பு..?

Muthu Kumar May 15, 2022 & 11:50 [IST]
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..! ஸ்டாலினுடன் சந்திப்பு..?Representative Image.

சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க மே 26ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி தமிழகம் வருகை

சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க மே 26ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. இந்நிலையில், பிரதமர் வருகையின் போது அவரை சந்தித்து இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் முன் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயணம் ரத்து

கடந்த ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி மதுரையில் பொங்கல் விழாவில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க வருகை தருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக மோடியின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டது.

தமிழகம் வருகை

இந்நிலையில் மே 26ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரதமர் - ஸ்டாலின் சந்திப்பு

விழாவில் கலந்துகொள்ள சென்னை வரும் பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் முன் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்