Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புரட்டாசி டிமாண்ட்.. நூறு ரூபாயை தாண்டி விற்பனையாகும் காய்கறிகள்!!

Sekar September 28, 2022 & 11:30 [IST]
புரட்டாசி டிமாண்ட்.. நூறு ரூபாயை தாண்டி விற்பனையாகும் காய்கறிகள்!!Representative Image.

வரத்து குறைவால் மலையில் விளையும் காய்கறிகளின் விலை தென்மாவட்டங்களில் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது புரட்டாசி மாதம் என்பதால் பலர் அசைவம் சாப்பிடுவதை முழுமையாக நிறுத்தி சைவம் மட்டுமேசாப்பிடுவர் . இதனால் வழக்கமாக இந்த மாதத்தில் காய்கறிகள் விலை சற்று அதிகமாகவே இருப்பது வாடிக்கை தான்.

ஆனால் இந்த ஆண்டு தென் மாவட்டங்களுக்கு, வரத்து குறைவால் மலைக்காய்கறிகளின் விலை வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக நெல்லையில் கேரட் விலை ரூ.100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது.

நேற்றைய நிலவரப்படி கேரட் விலை ஒரு கிலோ ரூ.106ஆக விற்பனையானது. இதேபோல் பீட்ரூட் விலை ரூ.46 முதல் 50 ஆகவும், ரிங் பீன்ஸ் விலை ரூ.75 ஆகவும், காலிபிளவர் விலை ரூ.70 ஆகவும் இருந்தது. 

இது தவிர உள்ளூரில் விளையும் வெள்ளை கத்தரிக்காய், பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றின் விலையும் கூட ரூ.50 ஐ தாண்டி சென்றுள்ளது.

இதுகுறித்து பேசிய வியாபாரிகள், புரட்டாசி மட்டுமல்லாது, ஐப்பசி முகூர்த்த சீசன் என்பதால் இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் காய்கறிகள் விலை உயர்ந்து தான் காணப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்