Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய்கள்..

Bala May 30, 2022 & 11:11 [IST]
ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய்கள்..Representative Image.

திருப்பூர் மாவட்டத்தில் வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலியாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலைப்பளையத்தை சேர்ந்த குழந்தைசாமி என்பவர், சிறுகள்ஞ்சி அருகேயுள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை அடைத்து வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் சுமார் 10 ஆடுகள் வரை பலியாகியுள்ளதாக விவசாயி குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பேசிய அவர்; இறைச்சிக் கழிவுகளை சாலையோரங்களிலும், தெருக்களிலும் கொட்டி வருவதால், அவற்றை உண்ணும் நாய்கள் ஆடு, மாடுகளை தாக்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக திருப்பூரில் வெறிநாய் தொல்லை அதிகரித்து வருவதாகவும், சில நேரங்களில் தெருக்களில் விளையாடும் குழந்தைகளையும் கடிப்பதாக தெரிவித்த அவர், அரசு தனக்கு உரிய நிவரானம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்