Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரேஷன் அட்டைதாரர்கள் இனி ஆன்லைனிலேயே பெறலாம்... விரைவில் அமலுக்கு வரும் புதிய முறை...

Gowthami Subramani September 09, 2022 & 18:35 [IST]
ரேஷன் அட்டைதாரர்கள் இனி ஆன்லைனிலேயே பெறலாம்... விரைவில் அமலுக்கு வரும் புதிய முறை...Representative Image.

தமிழகத்தில் ரேஷன் கார்டு அட்டையில் திருத்தம் செய்யப்படுவதற்கு பெறக் கூடிய கட்டணத்தில் மாற்றம் கொண்டு வர வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளைப் பெற விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான முறை இன்னும் அமலுக்கு வராமல் இருப்பதன் காரணமாக, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் செய்வதற்கு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அரசு அலுவலகங்களை நோக்கிப் பயணம் எடுப்பது குறைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ரேஷன் கார்டுகளைப் புதிதாக பெறுவதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் படி, புதிய ரேஷன் அட்டை பெறும் நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து, தபால் மூலம் கார்டுகளை அவரவர்களின் குறிப்பிடப்பட்ட முகவரியில் பெறலாம்.

முன்னதாக,  ரேஷன் அட்டைகளின் நகலைப் பெற நேரடியாக அலுவலகத்திற்குச் சென்று ரூ.20 கட்டணம் செலுத்திப் பெற வேண்டும். இதுவே, ஆன்லைன் முறையில் பதிவு செய்து தபால் மூலம் வரும் போது, தபால் கட்டணம் ரூ.25 மற்றும் ரேஷன் அட்டை ரூ. 20 என மொத்தம் ரூ.45 செலுத்த வேண்டும்.

இந்த அதிக கட்டணத்தை வசூலிக்கும் முறையை எதிர்த்து, மக்கள் வலுவான கோரிக்கையிட்டு வந்தனர். இது குறித்து அரசு வெளியிட்டதாவது, “மிகவும் எளிமையான முறையில் ஆன்லைன் வழியில் பணம் செலுத்தி கார்டு பெறும் முறை இன்னும் அமல்படுத்தப்படவில்லை எனவும், அதற்கான மென்பொருள் தயாரிப்பு பணி நடைபெற்று வருவதாகவும்” தெரிவித்தது. மேலும், பணி முடியக் கூடிய வகையில் இருக்கிறது. எனவே, விரைவில் ஆன்லைன் வழியாகவே கட்டணம் செலுத்தி கார்டு பெறும் முறை துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்