Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹனிமூன் இங்க தான்.. ரவீந்தர்-மஹாலட்சுமி ஜோடி செம அப்டேட்!!

Sekar September 10, 2022 & 12:10 [IST]
ஹனிமூன் இங்க தான்.. ரவீந்தர்-மஹாலட்சுமி ஜோடி செம அப்டேட்!!Representative Image.

சமீபத்தில் தங்கள் திருமணம் மூலம் தமிழ் நல்லுலகத்தில் ஒரு வைப்ரேஷனை ஏற்படுத்திய பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் 90'ஸ் கிட்ஸ் பேவரைட் மகாலட்சுமி தங்களது ஹனிமூன் குறித்தது பேசியுள்ள வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் சீரியல் நடிகையானமகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு மகனும் உள்ள நிலையில், இவர்களது திருமணம் அனைவரிடமும் பேசுபொருளானது. 

இவர்களது திருமணத்திற்கு பெரும்பாலோனோர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், சிலர் விமர்சனங்களையும் வைக்கத்தான் செய்கின்றனர். எனினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும், தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக தொடங்கியுள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து பல்வேறு சேனல்களுக்கு பேட்டிகளை அளித்து வரும் இந்த ஜோடி, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தங்கள் ஹனிமூன் குறித்து பேசியுள்ளனர். 

ஐரோப்பா அல்லது லண்டனில் தங்கள் ஹனிமூனை கொண்டாட திட்டமிட்டிருப்பதாகவும், தலை தீபாவளியை கொண்டாடிவிட்டு, அதன் பின்னர் நவம்பர் மாதம் ஹனிமூன் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், ஹனிமூன் விஷயத்தில் இவர்கள் நயன்-விக்கி ஜோடிக்கே டஃப் கொடுப்பாங்க போலயே என்று ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்