Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லுங்கி அணிந்து வந்தவருக்கு டிக்கெட் தர மறுப்பு:- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..

Bala August 06, 2022 & 12:15 [IST]
லுங்கி அணிந்து வந்தவருக்கு டிக்கெட் தர மறுப்பு:- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..Representative Image.

லுங்கி அணிந்து வந்திருந்ததால் முதியவருக்கு  திரையரங்கில் டிக்கெட் கொடுக்க மறுத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கதேசத்தில் பிரபலமான ஸ்டார் சினிப்ளெக்ஸ் திரையரங்கு நிறுவனத்திற்கு சில தினங்களுக்கு முன்பு சமன் அலி என்பவர் லுங்கியுடன் சென்றுள்ளார். லுங்கியுடன் சென்றதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அவருக்கு  டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் சர்கார் படம் பார்க்க முடியாமல் அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். 

இதனை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு நிலையில், திரையரங்கு ஊழியரின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் திரையரங்கில் இந்த ஆடை தான் அணிந்து வர வேண்டும் என விதிமுரைகள் எதுவும் உள்ளதா என கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையடுத்து, லுங்கி அணிந்து வந்த ரசிகருக்கு டிக்கெட் வழங்க மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்டார் சினிப்ளெக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்