Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சீனா - ரஷ்யா இடையிலான முதல் சாலைப் பாலம் திறப்பு...!

Bala June 11, 2022 & 13:22 [IST]
சீனா - ரஷ்யா இடையிலான முதல் சாலைப் பாலம் திறப்பு...!Representative Image.

உக்ரைனில் மாஸ்கோவின் போருக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதைக் குறிக்கும் வகையில், ரஷ்யா-சீனாவுக்கு இடையிலான முதல் சாலை பாலம் திறக்கப்பட்டுள்ளது.

அமுர் ஆற்றின் குறுக்கே, 19 பில்லியன் ரூபிள் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் சுமார் 1 கி.மீ. நீளத்தில் கிழக்கு ரஷ்ய நகரமான பிளாகோவெஷ்சென்ஸ்க்கை வடக்கு சீனாவின் ஹெய்ஹேவுடன் இணைக்கிறது. இரு நாடுகளின் வண்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாலத்தில் வானவேடிக்கை காட்சிக்கு நடுவில் இரு முனைகளிலிருந்தும் சரக்கு வாகனங்கள் பாலத்தை கடந்து சென்றன.

மேலும் சீனா-ரஷ்யா ரயில் பாலம் நாட்டின் வடகிழக்கு மாகாணமான ஹெய்லாங்ஜியாங்கில் உள்ள டோங்ஜியாங் நகரத்தையும் ரஷ்ய நகரமான நிஸ்னெலெனின்ஸ்காய்யையும் இணைக்கிறது 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்