Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முடிந்தால் ரஷ்யாவை தோற்கடித்து பாருங்கள்:- புதின் சவால்..!

Bala July 08, 2022 & 11:20 [IST]
முடிந்தால் ரஷ்யாவை தோற்கடித்து பாருங்கள்:- புதின் சவால்..!Representative Image.

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை தொடுக்கவில்லை என்றும், முடிந்தால் மேற்கத்திய நாடுகள் போர்களத்தில் ரஷ்யாவை தோற்கடித்து பாருங்கள் என ரஷ்ய அதிபர் புதின் சவால் விடுத்துள்ளார்.

பாராளுமான்ற உறுப்பினர்களிடையே உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் ரஷ்யா இன்னும் முழு அளவிலான போரை தொடுக்கவில்லை என்றும், போர் நீண்ட காலம் நீடிக்கும் நிலையில், அமைதி பேச்சு வார்த்தை என்பது குறைந்தே காணப்படும் என்றார். மேலும் கடைசி உக்ரைனியர்கள் உயிருடன் இருக்கும் வரை ரஷ்யாவுடன் போரிட்டு வருவோம் என்று உக்ரைன் கூறி வருகிறது. இது அந்நாட்டு மக்களுக்கு சோகத்தை தான் ஏற்ப்படுத்தும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,  முடிந்தால் ரஷ்யாவை போர் களத்தில் தோற்கடித்து காட்டுங்கள் என்று மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடுத்துள்ள அவர்,  அதே நேரத்தில் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராகவே இருப்பதாக குறிப்பிட்டார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்