4 மாதங்களாக உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்ய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் செவிரோடோனெட்ஸ்க் நகருக்கு செல்லக்கூடிய அனைத்து பாலங்களையும் ரஷ்ய படைகள் தகர்த்துவிட்டன. போர் தொடங்குவதற்கு முன் 1 லட்சம் பேர் வாழ்ந்து வந்த செவிரோடோனெட்ஸ்க் நகரில் தற்போது 12 ஆயிரம் பேர் சிக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனைதொடர்ந்து, சீவிரோடோனெட்ஸ்கில் உள்ள அஸோட் இரசாயன ஆலையில் பதுங்கியிருக்கும் உக்ரேனியப் படைகள் ஆயுதங்களை கிழே போட்டு சரணடையுமாறு ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. மேலும் அங்கு சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் மனிதாபிமான பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு "அதிக அளவிலான கனரக ஆயுதங்களை" அனுப்ப வேண்டும் என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…