அசாம் மாநிலத்தில் பள்ளியில் மாணவ, மாணவியர்கள் கட்டி அணைத்துக்கொண்டு நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் சில்சார் அடுத்த ராமானுஜ் குப்த என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கட்டி அணைத்துக்கொண்டு நெருக்கமாக இருப்பது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு மாணவியர் மற்றும் மூன்று மாணவர்கள் என மொத்த 7 பேரை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், சஸ்பெண்டான மாணவ மாணவியர்களின் பெற்றோர் அல்லது கார்டியன்களை பள்ளிக்கு வந்து விளக்கம் தர நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…