விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கிழே விழுத்தால் காயமடைந்த மாணவியை மீட்ட சக மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து மாணவி மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்றைய தினம் திருவள்ளூரை சேர்ந்த பள்ளி மாணவியில் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:- தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன ஆலோசனை பெற 24 மணி நேரம் இந்த எண்ணை 9152987821 தொடர்பு கொள்ளாலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…