Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பறிபோகும் ஆசியாவின் அமைதி...? சீனா- தைவான் ஒரு பார்வை..!

Bala August 09, 2022 & 09:39 [IST]
பறிபோகும் ஆசியாவின் அமைதி...? சீனா- தைவான்  ஒரு பார்வை..!Representative Image.

தைவானை சுற்றி சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், சீனாவின் பெய்ஜிங் தீவைச் சுற்றி அதன் மிகப்பெரிய அளவிலான  போர் பயிற்சியில் தைவான் ஈடுபட்டுள்ளது ஆசியா கண்டத்தில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

சீனாவின் ஒரு மாகணம் தான் தைவான் என சீனா கூறி வருகிறது. ஆனால் தைவான் தாங்கள் ஒரு சுதந்திரமான ஜனநாயக நாடு எனக் கூறி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சீனாவின் பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்சி அடைந்து வருகிறது. ஆசியாவில் அமெரிக்காவுக்கு இணையாக ஒரு நாடு வளர்சி அடைவதை விரும்பாத அமெரிக்கா, சீனா மீது  பல விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. 

இதனைதொடர்ந்து ரஷ்யாவுக்கு உக்ரைனை வைத்து சமாதி கட்டியது போல், சீனாவை தைவானை வைத்து பொருளாதார தடைகளை விதித்து சீனாவை முடக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி அமெரிக்கா செனட் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானில் தரையிறங்கினார்.

அவர் தைவான் செல்லும் சில மணி நேரம் முன்பு வரை தென்சீனக்கடலில் பதட்டமான சூழல் நிலவி வந்தது. நான்சி பெலோசி தைவான் செல்லும் போது, சீன படைகள் தைவானை நோக்கி நகர்தனர். மேலும் 21 சீன போர் விமானங்கள் தைவானை சுற்றி வட்டமிட்டதால் பதற்றம் அதிகரித்துக்கொண்டது.

இதனைதொடர்ந்து நான்சி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தென்சீனக்கடலில் முகாமிட்டிருந்த அமெரிக்கா போர்க்கப்பல்கள் தைவானை நோக்கி நகர்த்த்தப்பட்டன். தைவானிற்கு 30 நிமிடங்களில் செல்லும் வகையில் அமெரிக்க கப்பல்கள் இந்தோனேஷிய கடற்பகுதியில் நிலை கொண்டிருந்தன. மேலும் ஜப்பானில் உள்ள அமெரிக்கா ராணுவ தளத்தில் இருந்த போர் விமானங்களும் தைவனை நோக்கி விரைந்ததால் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்தது.

இருந்த போதிலும் பாதுகாப்பாக நான்சி தைவானில் தரையிறங்கினார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சீனா தைவான் மீது பல்வேறு தடைகளை விதித்தது. மேலும் தைவானை சுற்றி வளைத்து பிரம்மாண்ட போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இதனால் ஆசியாவில் ஒரு யுத்தம் தொடங்கி விட்டதாக ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வரும் நிபுணர்கள் கூறி வந்தனர்.

சீனாவின் போர் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவின் பெய்ஜிங் தீவைச் சுற்றி  மிகப்பெரிய அளவிலான  போர் பயிற்சியில் தைவான் ஈடுபட்டுள்ளது. தைவானின் இந்த நடவடிக்கை சீனாவை மேலும் ஆத்திரமடைய வைக்கும் என்றும், இது தான் அமெரிக்காவின் எண்ணம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

ஒரு வேலை ஆசியாவில் ஒரு போர் தொடங்கினால், அது அமெரிக்காவுக்கு சவாலாக தான் இருக்கும் என்றும், உக்ரைனில் அமெரிக்கா சாதித்தது போல் தைவானில் சாதிப்பது கடினமான செயல் எனக்கூறி வருகின்றனர். ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெறும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றனர். ரஷ்யா - சீனா நட்பு நாடுகள் என்றாலும், அமெரிக்காவின் எச்சரிக்கையால் சீனா அடக்கி வசித்து வருகிறது. 

ஒரு வேளை தைவானில் ஒரு யுத்தம் தொடங்கினால், ரஷ்யா - சீனா இணைந்து மிகப்பெரிய அளவிலான பதிலடி கொடுக்கும் என்றும், கொரிய யுத்தத்தில் அமெரிக்க படைகள் எப்படி சிதறுண்டு ஓடியதோ அவ்வாறே இந்த யுத்தமும் இருக்கும் என்றும், இதற்கு இடையில் தைவான் சிக்கி தவிக்கப்போகிறது என சர்வதேச அரசியலை கவணித்து வருபவர்கள் தெரிவித்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்