Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

Sekar September 05, 2022 & 12:05 [IST]
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!Representative Image.

உயர்கல்வி செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்பட 3 புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் முன்னதாக செயல்பாட்டில் இருந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் மகளிர் திருமண உதவித்திட்டம், கடந்த அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டமாக மாற்றப்பட்டது. 

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு, அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி செல்லும்போது மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் அறிவிக்கப்பட்டது. 

#LIVE: புதுமைப்பெண், தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் திட்டங்களின் தொடக்க விழா https://t.co/ebqxNHHrNd

— M.K.Stalin (@mkstalin) September 5, 2022

செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று இந்த திட்டம் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரிப் பள்ளிகள் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்