Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sri Lanka government bankrupt:-திவாலானது இலங்கை...மத்திய வங்கி அறிவிப்பு

Bala May 20, 2022 & 10:51 [IST]
 Sri Lanka  government bankrupt:-திவாலானது இலங்கை...மத்திய வங்கி அறிவிப்புRepresentative Image.

Sri Lanka  government bankrupt:-இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஆளும் கட்சியின் தவறான பொருளாதாரக்கொள்கைகளாலும், கொரோனா காரணமாக சுற்றுலா துறை முடக்கியதாலும், இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்ப்பட்டது. மேலும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்ப்பட்டதால் உணவு பஞ்சமும் தீவிரமடைந்தது.

இதனையடுத்து  இலங்கையை ஆளும் ராஜபக்சேவின் குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை ஏற்பட்டதால் ராணுவம் களமிறக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து வன்முறை தீவிரமடைந்ததால் பிரதமராக பதவி வகிந்து வந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைதொடர்ந்து இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. மேலும் வரும் காலங்களில், பணவீக்கம் 30 சதவீதத்திலிருந்து 40 சதவீகிதமாக அதிகரிக்கும் என்றும் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கே எச்சரித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்