Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொழில்நுட்பங்களைத் திருடும் சீனா..? அமெரிக்கா, பிரிட்டன் குற்றச்சாட்டு...!

Bala July 07, 2022 & 11:31 [IST]
தொழில்நுட்பங்களைத் திருடும் சீனா..? அமெரிக்கா, பிரிட்டன் குற்றச்சாட்டு...!Representative Image.


அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களை கண்காணிக்கும் உளவுத்துறை FBI இன் தலைவரும், பிரிட்டனின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் (MI5) தலைவரும் சீனவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து புதிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், 
 சீனா போட்டி ஆதாயத்திற்காக தொழில்நுட்பங்களைத் திருடப் பார்க்கிறது என்றும் அது பெரிய பாதுகாப்பு மீறல்களுக்கு வழிவகுக்கும் என்று  எச்சரித்தனர். மேலும், சீனாவால் நியமிக்கப்பட்ட பொருளாதார உளவுவேலை பற்றிய கவலைகள் தொடர்ந்து ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும்,  சீனாவுக்கு எதிராக வெளிநாட்டில் எழும்  எதிர்ப்பை அடக்குவதற்கு   ஹேக்கிங் நடவடிக்கைகள் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்கள், "நமது பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய நீண்டகால அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனாவை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம் என தெரிவித்துள்ளனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்