Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போதையில பாட்டு பாடலாம்… பாடம் எடுக்கலாமா…? போதையில் பாடம் எடுத்த பெண் ஆசிரியர்… அடுத்து நடந்தது தான் ட்விஸ்ட்

Gowthami Subramani September 09, 2022 & 16:10 [IST]
போதையில பாட்டு பாடலாம்… பாடம் எடுக்கலாமா…? போதையில் பாடம் எடுத்த பெண் ஆசிரியர்… அடுத்து நடந்தது தான் ட்விஸ்ட்Representative Image.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மது போதையில் பாடம் எடுத்ததாகக் கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள துமாபூர் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் ஆசிரியராக இருப்பவ்ர் தான் கங்கா லெட்சுமால் என்பவர். இவர் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால், பள்ளிக்கு மது பாட்டிலைக் கொண்டு மது அருந்தியபடியே மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்துள்ளார்.

இது குறித்து  வெளிவந்த அறிவிப்பில் தெரிவித்ததாவது, இவர் மது போதைக்கு மிகவும் அடிமையானவர் என்றும், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் போன்றோர் இவரைக் கண்டித்துள்ளனர் என்று கூறப்பட்டது. இதனை மீறி, ஆசிரியை கங்கா லெட்சுமால் தொடர்ந்து மது அருந்தி விட்டு மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்துள்ளார். இது குறித்து வெளிவந்த புகாரின் பேரில், பள்ளிக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கங்கா லெட்சுமால் அறைக்குச் சென்று சோதனையிட்ட போது, மேசை பெட்டியில் மது பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, மதுபாட்டிலை பறிமுதல் செய்து, கங்கா லெட்சுமாலலை பணியிடை நீக்கம் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கூறும் இந்த சமுதாயத்தில், வகுப்பறையில் இந்த ஆசிரியை செய்த செயலால் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்